சினேகம் அறக்கட்டளை தொடர்பான புகாரில் பாஜக நிர்வாகியான நடிகை ஜெயலட்சுமி கைது

சென்னை: சினேகம் அறக்கட்டளை தொடர்பாக பாடலாசிரியர் சினேகன் அளித்த புகாரில் நடிகையும், பாஜக நிர்வாகியுமான ஜெயலட்சுமி கைது செய்யப்பட்டார். சினேகம் பவுண்டேஷன் உரிமை தொடர்பாக சினேகனுக்கும், பாஜக மாநில துணைத் தலைவியுமான ஜெயலட்சுமிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. சென்னை திருமங்கலத்தில் உள்ள நடிகை ஜெயலட்சுமி வீட்டில் சோதனை நடத்திய போலீசார் அவரை கைது செய்தனர்.

சென்னை திருமங்கலம் வெல்கம் காலனி பகுதியில் வசித்து வருகின்றவர் நடிகை ஜெயலட்சுமி. இவர் தமிழக பாஜக பிரமுகராக உள்ளார். இவரது வீட்டுக்கு இன்று காலை 9.30 மணி அளவில், நீதிமன்ற சர்ச் வாரண்ட் அனுமதியுடன் திருமங்கலம் காவல் நிலைய உதவி ஆணையர் வரதராஜன், இன்ஸ்பெக்டர் சிபுகுமார் ஆகியோரின் தலைமையில் 10க்கும் மேற்பட்ட போலீசார் அவரது வீட்டில் தீவிர சோதனை நடத்தினர்.

சுமார் 3 மணிநேரம் சோதனை நடத்தியதை தொடர்ந்து விஜயலட்சுமியை போலீசார் கைது செய்துள்ளனர்.

Related posts

வானில் ஒரே நேரத்தில் 6 கோள்கள் தோற்றம்: நாளையும் பொது மக்கள் காணலாம்

தருமபுரி, நீலகிரி, ஈரோடு உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இரவு 10 மணிக்குள் லேசான மழைக்கு வாய்ப்பு

ஆன்லைனில் ஒரு வாழ்க்கை.. Offline-ல் ஒரு வாழ்க்கை: Gen Z தலைமுறை குறித்த ஆய்வில் தகவல்