சில்லி பாய்ன்ட்…

* பிரைம் வாலிபால் லீக் தொடரில் பெங்களூரு டார்பிடோஸ் அணியுடன் நேற்று மோதிய சென்னை பிளிட்ஸ் அணி 16-14, 15-11, 15-13 என்ற நேர் செட்களில் வென்றது.
* மகளிர் யு-16 தெற்காசிய கால்பந்து போட்டியில் நேபாளம் அணியை 10-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. பைனலில் இந்தியா – வங்கதேசம் மோதுகின்றன.
* இண்டியன் வெல்ஸ் டென்னிஸ் தொடரில் இருந்து ஸ்பெயின் நட்சத்திரம் ரபேல் நடால் விலகிய நிலையில், அவருக்கு பதிலாக இந்திய வீரர் சுமித் நாகல் பிரதான சுற்றில் களமிறங்குகிறார்.
* அயர்லாந்துடன் ஷார்ஜாவில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் ஆப்கானிஸ்தான் 35 ரன் வித்தியாசத்தில் வென்றது. ஆப்கான் 50 ஓவரில் 310/5 (ரகுமானுல்லா குர்பாஸ் 121, இப்ராகிம் ஸத்ரன் 60, முகமது நபி 40, ஹஷ்மதுல்லா 50*). அயர்லாந்து 50 ஓவரில் 275/8 (டெக்டர் 138, டக்கர் 85).
* ஜிம்பாப்வே அணியின் கிரிக்கெட் இயக்குனர் ஹாமில்டன் மசகட்சா ராஜினாமா செய்துள்ளார். ஐசிசி உலக கோப்பை டி20 தொடருக்கு ஜிம்பாப்வே அணி தகுதி பெறத் தவறியதை அடுத்து அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.
* மகளிர் ஐபிஎல் டி20 தொடரில் குஜராத் ஜயன்ட்ஸ் அணி வீராங்கனை ஹர்லீன் தியோல் காயம் காரணமாக தொடரின் எஞ்சிய போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக மகாராஷ்டிராவை சேர்ந்த பேட்ஸ்வுமன் பார்தி ஸ்ரீகிருஷ்ணா ஃபுல்மாலி சேர்க்கப்பட்டுள்ளார்.

Related posts

தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

ஒன்றிய அமைச்சர் ஆகிறாரா நிதிஷ்குமார்?.. பீகார் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு

கருத்துக் கணிப்புகள் பொய்யாகும்: தேர்தல் முடிவுகள் இந்தியா கூட்டணிக்கு சாதகமாக அமையும்.! காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி பேட்டி