குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களுக்கு போலீசார் புனைப்பெயர் வைப்பதை நிறுத்த வேண்டும்: காவல்துறைக்கு சென்னை அமர்வு நீதிமன்றம் உத்தரவு

சென்னை: 2022 ஜூலை மாதம் சென்னையில் சூளைமேடு பகுதியில் வழிப்பறி செய்த சரவணன் என்பவர் கைதுசெய்யப்பட்டார். இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி டி.லிங்கேஸ்வரன் முன்பு விசாரணைக்கு வந்தது. சரவணன் சார்பில் வழக்கறிஞர் சாலமன் பீட்டர் கமல்தாஸ் ஆஜராகி, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு பல்வேறு விதமாக பட்டப்பெயர்களை போலீசார் வைக்கிறார்கள் என்றார்.

வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவரின் பெயரை குரங்கு சரவணன் என்று முதல் தகவல் அறிக்கையில் காவல்துறை குறிப்பிட்டுள்ளது. ஒருவரின் பெயரை மாற்றுவது அவர்களின் சொந்த விருப்பமாக இருக்க வேண்டுமே தவிர காவல்துறையால் மரியாதை குறைவான பெயர்கள் வைக்கக் கூடாது. எனவே, குரங்கு என்ற வார்த்தை நீக்கப்படுகிறது. பெயர் என்பது நம் அடையாளத்தின் முக்கிய பகுதியாகும். தனிப்பட்ட, கலாச்சார, குடும்ப தொடர்புகளை ஆழமாக எடுத்து செல்பவைதான் பெயர்கள்.

இதுபோன்ற பட்டப்பெயர்களை வைப்பது வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவரின் மனித உரிமையை, அவர் நிரபராதி என்று கருதப்படுவதற்கான உரிமையை மீறும் வகையில் உள்ளது. இதுபோன்ற அடைமொழிகளை வைத்து அழைக்கும் நடைமுறையை உடனடியாக நிறுத்த வேண்டும். அதற்கான உரிய அறிவுறித்தல்களை காவல்துறை உயர் அதிகாரிகள் வழங்க வேண்டும்.

இந்த வழ்கில், பொது அமைதிக்கு இடையூறு ஏற்பட்டதற்கான சாட்சிகள் இல்லை. ஒரு சென்டிமீட்டர் அளவு கூட இல்லாத மூன்று கற்களைப் பயன்படுத்திக் கூட்டத்தை சரவணன் அச்சுறுத்தினார் என்ற கதையை எல்.கே.ஜி, யு.கே.ஜி. குழந்தைகள் கூட நம்பாது. வழக்கில் அரசு தரப்பு சாட்சிகள் நம்பகத்தன்மை அற்றவையாக உள்ளதால் சரவணனை இந்த நீதிமன்றம் விடுதலை செய்கிறது என்று தீர்ப்பளித்தார்.

Related posts

சிலந்தியாற்றின் குறுக்கே தடுப்பணை பணிகளை நிறுத்துக: கேரள முதல்வருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம்

திற்பரப்பில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகளுக்கு தடை

விசாகம், பவுர்ணமி, விடுமுறை தினத்தால் திருச்செந்தூரில் லட்சக்கணக்கில் குவிந்த பக்தர்கள்: கடும் போக்குவரத்து நெரிசல்