சிவ்ராஜ் பாட்டீலின் மருமகள் அர்ச்சனா பாஜவில் தஞ்சம்

மும்பை: காங்கிரஸ் மூத்த தலைவர் சிவ்ராஜ் பாட்டீலின் மருமகள் அர்ச்சனா பாட்டீல் நேற்று பாஜவில் இணைந்தார். மகாராஷ்டிரா காங்கிரஸ் மூத்த தலைவரும், ஒன்றிய முன்னாள் அமைச்சரும், மக்களவை முன்னாள் சபாநாயகருமான சிவ்ராஜ் பாட்டீலின் மருமகள் அர்ச்சனா பாட்டீல் சாகுர்கர் நேற்று பாஜவில் சேர்ந்தார். மருத்துவரான அர்ச்சனா பாட்டீல் சாகுர்கர் மகாராஷ்டிரா மாநிலம் உட்கிர் பகுதியில் இயங்கி வரும் லைஃப் கேர் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார். இவரது கணவர் ஷைலேஷ் பாட்டீல் சந்துர்கர் மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் செயலாளராக உள்ளார். இந்நிலையில் மும்பை பாஜ அலுவலகத்தில் துணைமுதல்வர் தேவேந்திர பட்நவிஸ், பாஜ மாநில தலைவர் சந்திரசேகர் பவன்குலே ஆகியோர் முன்னிலையில் அர்ச்சனா பாட்டீல் பாஜவில் தஞ்சமடைந்தார்.

Related posts

பிரசித்திபெற்ற முப்பந்தல் இசக்கியம்மன் கோயிலில் அம்மனுக்கு காணிக்கையாக வழங்கும் சேலைகள் மறு விற்பனை: பக்தர்கள் அதிர்ச்சி

வைகாசி மாத வளர்பிறை சஷ்டியை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

காயத்துக்கு துணியுடன் தையல் போட்ட டாக்டர்: ஈரோடு தனியார் மருத்துவமனை மீது புகார்