போலீசாரின் சாராய ரெய்டில் 4 செம்மரக்கட்டைகள் சிக்கியது

திருமலை : கள்ளச்சாராய ரெய்டுக்கு சென்ற போலீசாருக்கு 4 செம்மர கட்டைகள் கிடைத்தது. ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி மண்டலத்தில் உள்ள மேலச்சூர் ஊராட்சி மலைச் சரிவுகளில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து கலால் இன்ஸ்பெக்டர் சீனிவாசலு, ரூரல் எஸ்.ஐ. வெங்கடேசன் தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து சென்றனர்.

அப்போது அவர்களுக்கு கள்ளச்சாராயத்திற்கு பதில் விளை நிலங்களில் சட்ட விரோதமாக கடத்தத் தயாராக வைத்திருந்த ₹1.12 லட்சம் மதிப்புள்ள நான்கு செம்மரக் கட்டைகளை பறிமுதல் செய்தனர். செம்மரங்களை யார் கடத்தலுக்கு பதுக்கி வைத்தார்கள் என விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம்

இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம்

சென்னையில் வணிகப் பயன்பாட்டு சிலிண்டர் விலை குறைப்பு!!