பேரிடர் நிவாரண நிதியை உடனே வழங்க ஒன்றிய அரசை வலியுறுத்தி ஜன.3ல் சாஸ்திரிபவன் முற்றுகை

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்கள் மிக்ஜாம் புயல் மழையாலும், டிச. 17, 18ல் திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிக கனமழையாலும் மக்கள் வரலாறு காணாத இடர்பாடுகளுக்கு ஆளாகியுள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் இன்னும் கூட இயல்பு நிலைக்கு திரும்பவில்லை.

மக்கள் அனைத்தையும் இழந்து ஆதரவற்ற நிலையில் தவித்துக் கொண்டிருக்கும்போது தமிழ்நாடு அரசின் நிவாரண பணிகள் மற்றும் வழங்கி வரும் நிவாரணத் தொகைகள் ஓரளவு ஆறுதலை தருகின்றன. ஒன்றிய அரசு இதுவரை ஒரு ரூபாய் கூட நிவாரணம் வழங்கவில்லை என்பது பழிவாங்கும் போக்கை காட்டுகிறது. பேரிடர் நிவாரண நிதியாக தமிழக அரசு கேட்ட ரூ.21 ஆயிரம் கோடியை உடனடியாக வழங்கிட வற்புறுத்தி 2024 ஜனவரி 3ம் தேதி சென்னையில் ஒன்றிய அரசு அலுவலகங்கள் செயல்படும் சாஸ்திரி பவனை மார்க்சிஸ்ட் சார்பில் முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related posts

உளுந்தூர்பேட்டை அருகே மூதாட்டி வீட்டில் கொள்ளையடித்த வழக்கில் 6 பேர் கைது: 50 பவுன் நகை பறிமுதல்

காதல் விவகாரத்தில் கத்திக்குத்து முன்னாள் காதலன் பரிதாப பலி: இந்நாள் காதலன் வெறிச்செயல்

மும்பை வடமேற்கு தொகுதியில் EVM-ல் முறைகேடு நடந்ததாக எழுந்துள்ள புகார் தொடர்பாக தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க காங்கிரஸ் வலியுறுத்தல்