சுறா பூண்டு குழம்பு

தேவையானவை :

சுறாமீன் – 1/2 கிலோ
பூண்டு – 3
கறிவேப்பிலை – சிறிதளவு
கொத்தமல்லி – சிறிதளவு
புளிக்கரைசல் – 1/4 கப்
தனியாத்தூள் – 3 டீஸ்பூன்
மஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூன்
எண்ணை – 1 டீஸ் ஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
தக்காளி – 200 கிராம் (நறுக்கியது)
பச்சை மிளகாய் – 2
உப்பு – தேவையான அளவு
வெந்தயம் – 1/2 டீஸ்பூன்
வெங்காயம் – 200 கிராம் (நறுக்கியது)
மிளகுத்தூள் – 3 டீஸ்பூன்
சீரகத்தூள் – 1 டீஸ்பூன்
மிளகாய்தூள் – 2 டீஸ்பூன்

செய்முறை :

ஒரு வாணலியில் எண்ணை ஊற்றி காய்ந்ததும், கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.பிறகு நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.தொடர்ந்து பூண்டு, தக்காளி, மிளகாய் இவை சேர்த்து நன்கு வதக்கவும். வதங்கியதும் சுறாமீன் துண்டுகளை சேர்க்கவும். மீன் துண்டுகள் நன்கு வதங்கியவுடன் தேவையான அளவு நீர் ஊற்றி வேக வைக்கவும்.மிளகாய்த்தூள்,தனியாத்தூள், மஞ்சள்தூள் மற்றும் புளிக்கரைசல் ஊற்றி மிளகுத்தூள், சீரகத்தூள் தேவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.மசாலாவின் பச்சை வாசனை போய், குழம்பு திக்காக வந்தவுடன் கொத்தமல்லி இலையைத் தூவி குழம்பை இறக்கிவிடவும்.

Related posts

இளநீர் நன்னாரி ஜூஸ்

கடாய் பனீர்

வெண்டைக்காய் பருப்பு சாதம்