பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் விழுப்புரம் நீதிமன்றத்தில் ராஜேஷ்தாஸ் வாதம்

விழுப்புரம் : பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் விழுப்புரம் நீதிமன்றத்தில் ராஜேஷ்தாஸ் ஆஜராகி வாதம் செய்து வருகிறார். 2-வது நாளாக தானே ஆஜராகி விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி பூர்ணிமா முன்னிலையில் ராஜேஷ்தாஸ் வாதிட்டார். பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் ராஜேஷ் தாஸுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 3 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ராஜேஷ் தாஸ் மேல்முறையீடு செய்துள்ளார்.

Related posts

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் இங்கிலாந்தில் பயிற்சி முடித்த 25 மாணவர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்

சென்னை பட்டினம்பாக்கம் காவலர் குடியிருப்பில் 3 நாளில் 2 போலீசார் தூக்கிட்டு தற்கொலை

டெல்லி விமான நிலையத்தில் மின் அழுத்தத்தில் ஏற்றத்தாழ்வு ஏற்பட்டதாலும் விமானங்கள் புறப்படுவதில் தாமதம்