தொடர் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த மூன்று பேருக்கு குண்டாஸ்

ஆவடி: தொடர் குற்றசம்பவங்களில் ஈடுபட்டு வந்த மூன்று பேருக்கு ஆணையர் சந்திப் ராய் ரத்தோர் உத்தரவின்பேரில் குண்டாசில் கைது செய்யப்பட்டனர். ஆவடி காவல் ஆணையரகத்தில் தொடர் கொலை மற்றும் கொள்ளையில் ஈடுபட்டு வந்த மூன்று பேரை ஆணையர் சந்திப் ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தனர். அதன்படி, எண்ணுர் பகுதியில் கொலை, வழிப்பறி வழக்கில் தொடர்புடைய தண்டையார் பேட்டையைச் சேர்ந்த நசரத்துல்லா (23). எர்ணாவூரைச் சேர்ந்த முகமது முஜித் (23). பூந்தமல்லி காவல் நிலைய கொள்ளை வழக்கில் தொடர்புடைய மதுரவாயிலைச் சேர்ந்த கலைச்செல்வன் (27) ஆகியோர் குண்டர் தடுப்பு சட்டத்தில் நேற்று சிறையில் அடைக்கப்பட்டனர்.இந்த ஆண்டில் இதுவரை 104 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Related posts

ஜூன் 17: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

2018 தேர்தல் வேட்பு மனுவில் ரகசிய மகளின் பெயரை மறைத்த இம்ரான் கான்: உச்ச நீதிமன்றத்தில மேல்முறையீடு

காசா மக்களுக்கு உதவிகள் கிடைப்பதற்கு பகல் நேரத்தில் சண்டை நிறுத்தம்: இஸ்ரேல் அறிவிப்பு