சென்செக்ஸ் 17 புள்ளிகள் உயர்வு; நிஃப்டி சரிவு

மும்பை: வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட சென்செக்ஸ் உயர்ந்தும், நிஃப்டி சரிந்தும் முடிந்துள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 17 புள்ளிகள் உயர்ந்து 73,896 புள்ளிகளானது. காலை நேர வர்த்தகத்தின் போது சென்செக்ஸ் 481 புள்ளி உயர்ந்து 74,359 புள்ளிகளை தொட்டுவிட்டு 460 புள்ளிகள் சரிந்தது. கோட்டக் வங்கி 5%, டி.சி.எஸ். 2%, இந்துஸ்தான் யுனிலீவர் 1.8%, எம்&எம், சன்பார்மா பங்குகள் தலா 1.4% விலை உயர்ந்தன. டெக் மகிந்திரா, இண்டஸ்இண்ட் வங்கி, JLW ஸ்டீல், டாடா ஸ்டீல், இன்போசிஸ் பங்குகளும் விலை அதிகரித்தன. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 23 புள்ளிகள் சரிந்து 22,443 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு பெற்றது. காலை நேர வர்த்தகத்தில் 113 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த நிஃப்டி பிற்பகலில் சரிந்து 22443 புள்ளிகளில் நிறைவடைந்தது.

Related posts

வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்கிறார் ராகுல்காந்தி: இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டி

நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் ஒரு வாரம் இங்கிலாந்தில் பயிற்சி முடித்து சென்னை திரும்பிய 25 மாணவர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்

பக்தர்கள் அளிக்கும் காணிக்கை மோசடி தொடர்பாக பேசியதால் முன்னாள் கோயில் அறங்காவலரை வழிமறித்து கத்தி முனையில் கொலை மிரட்டல்: அர்ச்சகர் காளிதாஸ் உட்பட 5 பேர் மீது வழக்கு பதிவு