தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பிரபல பெண் தாதா உட்பட 2 பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது

பெரம்பூர்: சென்னை கொடுங்கையூர் இந்திரா காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் தாரணி (26). இவர் மீது கஞ்சா, குட்கா மற்றும் கள்ள சந்தையில் மதுபானங்கள் விற்பது என 10க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. கொடுங்கையூர் பகுதியில் பெண் தாதாவாக வலம் வந்தார். மேலும் தனது வீட்டில் அடியாட்களை வைத்துக்கொண்டு கஞ்சா வியாபாரம் உள்பட பல்வேறு சட்டத்துக்கு புறம்பான வேலைகளை செய்துவந்துள்ளார். கடந்த 2022ம்ஆண்டு கொடுங்கையூர் இன்ஸ்பெக்டர் சரவணன் இவரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தார். இதன்பின்னர் வெளியேவந்த தாரணி, மீண்டும் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டார்.

இதனால் கொடுங்கையூர் போலீசார் கைது செய்து 5 மாதம் சிறையில் அடைத்தனர். இதையடுத்து வெளியே வந்த தாரணி மீண்டும் நேற்றுமுன்தினம் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் தாரணி மற்றும் அவருக்கு உறுதுணையாக இருந்த இந்திரா காந்தி நகர் பகுதியை சேர்ந்த திருநங்கை ஷீபா (21) ஆகியோரை கைது செய்தனர். தொடர்ந்து கஞ்சா, குட்கா மற்றும் மதுபானம் விற்பனையில் ஈடுபட்டுவந்ததால் பெண் தாதா தாரணி, ஷீபா ஆகியோரை மீண்டும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related posts

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் மறைவையொட்டி நாளை ஒருநாள் துக்க நாளாக அனுசரிக்கப்படும்: ஒன்றிய அரசு

தூத்துக்குடி துறைமுகத்தில் முந்திரி ஏற்றுமதியாளரிடம் ரூ.6 கோடி மோசடி

3 நாள் பயணமாக தமிழக ஆளுநர் ரவி டெல்லி சென்றார்