தேர்வுக்குழு உறுப்பினரான எனக்கு தெரியாமல் தலைமை தகவல் ஆணையர் தேர்வு: ஜனாதிபதிக்கு காங். எம்.பி ஆதிர் ரஞ்சன் கடிதம்

புதுடெல்லி: நாட்டின் தலைமை தகவல் ஆணையராக பதவி வகித்த யஷ்வர்தன் குமார் சின்ஹா, கடந்த அக்டோபர் 3ம் தேதி ஓய்வு பெற்றார். இதையடுத்து ஹீராலால் சமாரியா, நேற்று முன் தினம் புதிய தலைமை தகவல் ஆணையராக பதவியேற்றுக் கொண்டார். இந்நிலையில் காங் எம்.பி ஆதிர் ரஞ்சன் ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது: ‘தலைமை தகவல் ஆணையர் தேர்வுக்குழு நான் உறுப்பினராக உள்ளேன். தேர்வுக்குழு கூட்டம் கடந்த 3ம் தேதி மாலை 6 மணியளவில் பிரதமர் வீட்டில் நடக்க உள்ள நிலையில், கூட்டத்தை அன்று காலையில் நடத்த வேண்டுகோள் விடுத்தேன்.

அது பற்றி பதில் ஏதும் இல்லை. இந்நிலையில் எனக்கு தெரியாமல் அன்று மாலை பிரதமர் வீட்டில் பிரதமர் மற்றும் அமித்ஷா ஆகியோர் கூடி ஆணையரை தேர்வு செய்தனர். ஆணையர் தேர்வு, பதவி ஏற்பு ஆகியவை எல்லாம் முன்னதாகவே திட்டமிட்டு நடத்தப்பட்டவை என்று சந்தேகிக்கிறேன். பதவி ஏற்பு அன்று காலையில்தான் எனக்கு அழைப்பு வந்தது. இது அப்பட்டமான ஜனநாயக மரபு மீறல். இந்த ஜனநாயக மரபு மீறலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்’ இவ்வாறு ஆதிர் ரஞ்சன் தெரிவித்துள்ளார்.

Related posts

பாஜக கூட்டணியில் குழப்பம்: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அமமுக போட்டி?

ஒடிசா, ஆந்திரா மாநில முதலமைச்சர்கள் இன்று பதவியேற்பு

தேர்தல் தோல்வி, தமிழ்நாடு பா.ஜ.க.வில் உட்கட்சி மோதல்: அறிக்கை கேட்கிறது கட்சி மேலிடம்