கர்நாடகாவில் போலீசார் சோதனையில் ரூ.5 கோடி சிக்கியது: ஒரு கிலோ தங்கமும் பறிமுதல்

பல்லாரி: பல்லாரியில் உள்ள புரூஸ்பேட் காவல் நிலையத்திற்கு உட்பட்ட வீட்டில் ரூ.5.60 கோடி ஆவணமற்ற பணம் சிக்கியது. மேலும், தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்களும் கிடைத்துள்ளன. இவற்றின் மொத்த மதிப்பு 7.5 கோடி என போலீசார் தெரிவித்தனர். பல்லாரி மாவட்டம், கம்பளி பஜாரில் உள்ள நகைக்கடை உரிமையாளரின் வீட்டில் ரகசிய தகவலின் அடிப்படையில் பல்லாரி டி.எஸ்.பி. மற்றும் புரூஸ்பேட்டை போலீசார், சோதனை நடத்தினர்.

அப்போது 5 கோடியே 60 லட்சம் ரொக்கப்பணம், 68 கட்டி வெள்ளி, 103 கிலோ நகை வெள்ளி, 1 கிலோ தங்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவற்றின் மொத்த மதிப்பு 7.5 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரஞ்சித்குமார் பண்டாரு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.

இது தொடர்பாக புரூஸ்பேட்டை காவல் நிலையத்தில் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.அந்த பணம் யாருக்கு சொந்தமானது என்பது தெரியவில்லை. இது குறித்து போலீசார் விசாரணை நடந்து வருகிறது. மேலும் வருவாய்த்துறையினருக்கு பணம் மற்றும் தங்கம் அனுப்பப்பட்டு, மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

Related posts

புரோட்டா சாப்பிட்ட 5 பசுக்கள் பலி

57 பவுன் நகை கொள்ளையடித்த சிறை ஏட்டு உட்பட 6 பேர் கைது

ஒன்றிய பட்ஜெட்: அமைச்சர் ஆலோசனை