திரவுபதி அம்மன் கோயிலுக்கு சீல்- ஜூலை 7-ல் விசாரணை

விழுப்புரம்: மேல்பாதி திரவுபதி அம்மன் கோயிலுக்கு சீல் வைத்த விவகாரம் தொடர்பாக ஜூலை 7-ல் 2-ம் கட்ட விசாரணை என விழுப்புரம் கோட்டாட்சியர் அறிவித்துள்ளார். ஜூலை 7-ம் தேதி விசாரணைக்கு ஆஜராக இரு பிரிவினருக்கும் சம்மன் அனுப்பப்பட்டது. வரும் ஜூலை 7ம் தேதி காலை 11 மணிக்கு விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் 2ம் கட்ட விசாரணை நடைப்பெறும்.  திரவுபதி அம்மன் கோயிலுக்குள் நுழைவது தொடர்பாக இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டதால் கோயிலுக்கு சீல் வைக்கப்பட்டது. இரு பிரிவினர் இடையே கடந்த மாதம் 9-ம் தேதி நடந்த பேச்சுவார்த்தையில் சுமுக உடன்பாடு எட்டப்படவில்லை.

Related posts

பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்கவே அதிமுக தேர்தல் புறக்கணிப்பு: ஆர்.எஸ்.பாரதி பரபரப்பு குற்றச்சாட்டு

எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டுக்கு திமுக கண்டனம்

போக்சோ வழக்கில் விசாரணைக்கு ஆஜரானார் கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா