விஷவாயு தாக்கி 2 தொழிலாளிகள் பலியான விவகாரம் பள்ளி தாளாளர் கைது

பொன்னேரி: மே தினத்தன்று மீஞ்சூர் தனியார் பள்ளியில் கழிவு நீர் அகற்றும் பணியில் ஈடுபட்ட இரு தூய்மை தொழிலாளர்கள் பலியான சம்பவத்தில் அந்த பள்ளியின் தாளாளர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மீஞ்சூர் பேரூராட்சிக்கு உட்பட்ட நேதாஜி நகர் பகுதியில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி உள்ளது. அந்த பள்ளியின் கழிவு நீர் தொட்டியை சுத்தப்படுத்துவதற்காக, தொழிலாளர் தினம் என்றும் பாராமல் மீஞ்சூர் பேரூராட்சி தூய்மைப் பணியாளர்கள் 2 பேர் நேற்று முன்தினம் ஈடுபடுத்தப்பட்டனர்.

அப்போது விஷவாயு தாக்கி அவர்கள் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இது சம்பந்தமாக ஆவடி காவல்துறை சரக போலீசார் விசாரணை செய்தனர், பள்ளியின் கழிவுநீர் சுத்தம் செய்தபோது, தொழிலாளர்கள் இறந்த சம்பவத்திற்கு பொறுப்பு என்ற அடிப்படையில் பள்ளியின் தாளாளர் சிமியோன்(63) மீஞ்சூர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

Related posts

பாரிஸ் ஒலிம்பிக்ஸ்: தொடர் ஓட்டத்தில் விளையாட இந்திய மகளிர், ஆடவர் அணி தகுதி பெற்றது

ஈரோடு பெருமுகையில் சிறுத்தை நடமாட்டம்: வனத்துறை எச்சரிக்கை

மேட்டுப்பாளையத்தில் பாகுபலி யானை நடமாட்டம்..!!