எதிர்கட்சிகளின் ஒருமித்த கோஷங்களுக்கு மத்தியில் சரத்பவார் – கவுதம் அதானி திடீர் சந்திப்பு: தேசிய அரசியலில் பரபரப்பு

மும்பை: அதானி குழும விவகாரங்கள் தொடர்பாக எதிர்கட்சிகளின் ஒருமித்த கருத்துக்கு மத்தியில் சரத்பவாரை கவுதம் அதானி திடீரென சந்தித்தது தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் போது, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பிரபல தொழிலதிபர் அதானியுடனான பிரதமர் மோடியின் உறவு குறித்து கேள்வி எழுப்பினார்.

அதானி குழுமம் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழு (ஜேபிசி) விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. ஆனால் அதானி குழும விவகாரம் குறித்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் அளித்த பேட்டியில், ‘அதான குழும விவகாரம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருவதால், ஜே.பி.சி விசாரணை தேவையில்லை’ என்று கூறினார். ஜேபிசி விசாரணை வேண்டும் என்று ராகுல் காந்தியும், பிற எதிர்கட்சி தலைவர்களும் கூறி வரும் நிலையில், சரத்பவாரின் பேட்டி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதற்கிடையே சரத் பவாரின் உறவினரான அஜித் பவார் பாஜகவில் சேரவுள்ளதாக வெளியான செய்திகள் மேலும் அரசியல் வட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் மும்பையின் சில்வர் ஓக் பகுதியில் வசிக்கும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை, தொழிலதிபர் கவுதம் அதானி திடீரென சந்தித்தார். சுமார் இரண்டு மணி நேரம் நடந்த சந்திப்பில், ஹிண்டன்பர்க் அறிக்கை விவகாரம், உச்சநீதிமன்ற விசாரணை, எதிர்கட்சிகளின் கோரிக்கை உள்ளிட்ட விசயங்கள் குறித்து பேசப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

வைகாசி மாத பௌர்ணமி: திருவண்ணாமலை கோயிலில் 5 மணி காத்திருந்து பக்தர்கள் தரிசனம்

வேலூரில் போலீசார் அதிரடி வீடுகளில் தொடர் கைவரிசை காட்டிய 3 பேர் கைது

மரக்காணம் பகுதியில் தாய்லாந்து நாட்டு மரவள்ளி பயிரிட விவசாயிகள் ஆர்வம்