மணல் கடத்தல் கும்பலுடன் தொடர்பு கேரளாவில் 2 எஸ்ஐ, 5 போலீசார் டிஸ்மிஸ்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருச்சூர் சரகத்திற்கு உட்பட்ட பல்வேறு போலீஸ் நிலையங்களில் பணிபுரிந்து வந்த சப்-இன்ஸ்பெக்டர்களான ஜாய் தாமஸ், கோகுலன் மற்றும் காவலர்களான நிஷார், ஷிபின், அப்துல் ரஷீத், ஷெஜீர் மற்றும் ஹரிகிருஷ்ணன் ஆகியோர் மணல் கடத்தல் கும்பல்களுடன் தொடர்பு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்காக இவர்களுக்கு பெருமளவு பணம் கிடைத்து வந்தது. இதைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன் சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 7 பேரும் கண்ணூர் சரகத்திற்கு மாற்றப்பட்டனர். இந்நிலையில் 7 பேரையும் பணியிலிருந்து டிஸ்மிஸ் செய்து கண்ணூர் சரக டிஐஜி புட்ட விமலாதித்யா உத்தரவிட்டுள்ளார்.

Related posts

மக்களவைத் தேர்தலில் 280க்கும் மேல் முன்னிலை வகித்தாலும் 107 இடங்களில் 1000 வாக்குகள் கூட வித்தியாசம் இல்லை; விழிபிதுங்கும் பாஜக

மக்களவை தேர்தலில் பாஜக எதிர்பார்த்த இடங்களை கைப்பற்றாததால் பங்குச்சந்தைகள் வரலாறு காணாத சரிவு

பரபரப்பாக தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் ராகுல் காந்தி – பிரியங்கா காந்தி ஆலோசனை..!!