சேலம், திருச்சி மெட்ரோ ரயில் திட்டத்திற்கான சாத்தியக்கூறு அறிக்கை இம்மாத இறுதியில் அரசிடம் சமர்ப்பிக்கப்படும்: மெட்ரோ நிர்வாகம் தகவல்

சென்னை: சேலம், திருச்சி மெட்ரோ ரயில் திட்டத்திற்கான சாத்தியக்கூறு அறிக்கை இம்மாத இறுதியில் அரசிடம் சமர்ப்பிக்கப்படும் என்று மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. சேலம், திருச்சி மெட்ரோ ரயில் திட்டத்துக்கான சாத்தியக்கூறு ஆய்வறிக்கை பணிகள் 95% நிறைவு பெற்றுள்ளது. கோவை, மதுரையை தொடர்ந்து சேலம், திருச்சியில் மெட்ரோ ரயில் திட்டத்திற்கான சாத்தியக்கூறு ஆய்வுப் பணிகள் நடந்து வந்தன. சேலத்தில் 40 கி.மீ, திருச்சியில் 38 கி.மீ. தூரத்திற்கு மெட்ரோ வழித்தடம் அமைப்பதற்கான ஆய்வு நடந்து வந்தது. சத்தியக்கூறு ஆய்வறிக்கை பணி 95% முடிந்துள்ள நிலையில் இம்மாத இறுதியில் அரசிடம் அறிக்கை அளிக்கப்பட உள்ளது

 

Related posts

கேரள மாநிலம் திருச்சூரில் கிணற்றில் தவறி விழுந்த சிறுத்தை புலி: மூங்கில் மரக்கம்பு உதவியுடன் மீட்ட வனத்துறை

கோவையில் யானை மந்தைகளுடன் குட்டியானையை சேர்க்க முயற்சி!!

தேவர்சோலை பகுதியில் காயத்துடன் சுற்றித் திரிந்த சிறுத்தை: வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியது