சபர்மதி ரயில் தடம்புரண்டது

புதுடெல்லி: ராஜஸ்தானில் அஜ்மீர் ரயில்நிலையத்தை கடந்த சபர்மதி-ஆக்ரா விரைவு ரயில் மதர் ரயில்நிலையத்தை அடைய இருந்தது. அப்போது திடீரென ரயிலின் 4 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதனால் ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டது. நள்ளிரவு ஒரு மணியளவில் நடந்த இந்த விபத்தில் ரயில் பெட்டியில் இருந்த பயணிகள் யாரும் காயமடையவில்லை.

ரயில் பெட்டிகள் தடம் புரண்டதற்கான காரணம் தெரியவில்லை. இது குறித்த விசாரணைக்கு ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதனிடையே தடம் புரண்ட பெட்டிகள் மீட்கப்பட்டு ரயில் புறப்பட்டது. 6 ரயில்கள் ரத்து செய்யப்பட்டது. மேலும் 2 ரயில்கள் வேறு பாதையில் இயக்கப்பட்டன.

Related posts

நீலகிரி கொளப்பள்ளி குறிஞ்சி நகர் பகுதியில் 26 அடி கிணற்றில் விழுந்த யானை குட்டி மீட்பு

சோழவரம் அருகே மின்சாரம் பாய்ந்து லாரியில் தீ: ஓட்டுநர் பலி

நெல்லை-எழும்பூர் இடையே சிறப்பு வாராந்திர ரயில்களின் சேவை நீட்டிப்பு: தெற்கு ரயில்வே