சபரிமலை மண்டல, மகர விளக்கு பூஜை தரிசன நிகழ்வு: 9 பேர் மாயம்

கேரளா: சபரிமலையில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை காலத்தில் தரிசனத்திற்காக சென்ற 9 பக்தர்கள் காணாமற்போனது தெரியவந்துள்ளது. கடந்த நவம்பர் 15 முதல் ஜனவரி 20ம் தேதி வரை சபரிமலை ஐயப்பன் கோவிலில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். கட்டுக்கடங்காத கூட்டத்தால் நெரிசல் ஏற்பட்டு பக்தர்கள் சிரமத்திற்கு ஆளான நிகழ்வுகளும் அரங்கேறின. இந்நிலையில் மகர விளக்கு மற்றும் மண்டல பூஜை காலத்தில் தரிசனத்திற்காக வந்த 9 பக்தர்கள் காணாமல் போனது தெரியவந்தது.

இது தொடர்பாக பம்பை, சன்னிதானம் உள்ளிட்ட இடங்களில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காணாமல் போனவர்களில் சென்னையை சேர்ந்த கருணாநிதி, திருவள்ளுர் ராஜா, திருவண்ணாமலை ஏழுமலை, பொம்மையா பாளையத்தை சேர்ந்த ஐயப்பன் ஆகியோரும் அடங்குவர். இதே போல் ஆந்திராவை சேர்ந்த 2 பேரும் கேரளா, கர்நாடகா, தெலுங்கானாவை சேர்ந்த தலா ஒரு பக்தர்களும் காணாமல் போனதாக கேரளா காவல்துறை தெரிவித்துள்ளது. அவர்களை தேடும் பணியில் பத்தினம் திட்டா மாவட்ட போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Related posts

எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது: நான் ஒன்றிய அமைச்சராவது இறைவன் கையில் உள்ளது.! மதுரையில் ஓ.பன்னீர் செல்வம் பேட்டி

செல்லப்பிராணி மையங்களுக்கு விதிமுறைகளை வகுக்கக்கோரி வழக்கு முடித்துவைப்பு..!!

சென்னையில் அடுத்த ஒரு மாதத்தில் தெரு நாய்கள் கணக்கெடுப்பு நடத்தப்படும்: மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் உறுதி