ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் … ரிக்டர் அளவுக் கோலில் 6.9 ஆக பதிவு : சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை

மாஸ்கோ : ரஷ்யாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் மக்கள் வீதிகளில் அலறி அடித்து ஓட்டம் பிடித்த வீடியோ வெளியாகி உள்ளது. ரஷ்யாவின் பசுபிக் கடற்கரையில் பெட்ரோபாவ்லோவ்ஸ்க்-கம்சாட்ஸ்கிக்கு தெற்கே சுமார் 44 கிமீ (27 மைல்) தொலைவில் 100 கிமீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி பிற்பகல் 3.06 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 6.9 ஆக நில அதிர்வு பதிவான போதும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என அமெரிக்க சுனாமி எச்சரிக்கை அமைப்பு தகவல் தெரிவித்தது.

மாஸ்கோவிற்கு கிழக்கே கிழக்கே 6,800 கிமீ தொலைவில் உள்ள கம்சட்கா தீபகற்பத்தில் இருக்கும் கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டது. அங்குள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றிலும் பொருட்கள் வாங்கிக் கொண்டு இருந்த மக்கள் பொருட்கள் தரையில் விழுவதை கண்டு அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். எதிர்பாராத இந்த இயற்கை பேரிடரில் உயிரிழப்போ அல்லது பெரும் பொருட் சேதமோ ஏற்படவில்லை என்று அந்நாட்டு அவசரகால அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Related posts

மணலி துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட பழுது சரிசெய்யப்பட்டு, மின் விநியோகம் சீரானது!!

கனமழை எச்சரிக்கை.. உதகைக்கு வரவேண்டாம்: மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்..!!

I.N.D.I.A. கூட்டணி ஆட்சிக்கு வந்தால் புல்டோசர் மூலம் ராமர் கோயிலை இடித்து தள்ளிவிடுவார்கள் : பிரதமர் மோடி