ம.பி.யில் ரூ.12 கோடி ஜிஎஸ்டி மோசடி

இந்தூர்: மத்திய பிரதேசத்தின் இந்தூரில் செயல்பட்டு வரும் தனியார் உணவு தானிய நிறுவனத்தின் உரிமையாளர், ஜிஎஸ்டி வரி கட்டாமல் இருக்க, போலி நிறுவனத்தின் பெயரில் பில் புத்தகங்களைப் பயன்படுத்தி ரூ.12 கோடி வரி ஏய்ப்பில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்ததாக ஒன்றிய ஜிஎஸ்டி துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இவருக்கு போலி நிறுவனங்களின் பெயரில் பில் புத்தகங்களை குஜராத் புரோக்கரிடம் இருந்து ஆன்லைன் மூலமாக வாங்கி மற்றொருவர் வாங்கி வந்தார்.

இதையடுத்து, கமிஷனுக்காக போலி நிறுவனங்களின் பெயரில் பில் புத்தகங்களை வாங்கி கொடுத்தவர், நிறுவனத்தின் உரிமையாளரை போலீசார் கைது செய்தனர். போலி நிறுவன பில் புத்தகங்களை கமிஷனுக்காக வாங்கி கொடுத்தவர் கடந்த 2021ம் ஆண்டிலும் இதே வழக்கில் கைதானார்.

Related posts

வாரயிறுதி நாட்களை ஒட்டி வரும் 17ம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம் என தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு

அண்மையில் சூரியனில் ஏற்பட்ட வெடிப்பை படம் எடுத்து அனுப்பியுள்ளது இஸ்ரோவின் ஆதித்யா எல் 1 விண்கலம்!

பாஜக 195-ஐ தாண்டாது; ‘இந்தியா’ கூட்டணி 315 தொகுதியை கைப்பற்றும்.! மம்தா பானர்ஜி நம்பிக்கை