ரூ.100 கோடி வங்கி மோசடி ஐஎல் அண்ட் எப்எஸ் மீது வழக்கு: 3 இடங்களில் சிபிஐ சோதனை

புதுடெல்லி: ஐஎல் அண்ட் எப்எஸ் எனர்ஜி டெவலப்மென்ட் நிறுவனம் பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.100.30 கோடி கடனாக பெற்றுள்ளது. இந்த பணத்தை பல்வேறு வழிகளில் முறைகேடாக பயன்படுத்தியது, கடனை திருப்பாமல் ஏமாற்றியது, விதிகளுக்கு மாறாக கடன் வாங்கிய பணத்தை பயன்படுத்துவது உள்பட பல்வேறு முறைகேடுகளில் ஐஎல் அண்ட் எப்எஸ் எனர்ஜி டெவலப்மென்ட் நிறுவனம் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதன் பேரில் நிறுவன இயக்குநர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் டெல்லி, உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன், மும்பை, மகாராஷ்டிரா ஆகிய இடங்களில் நிறுவனத்துக்கு சொந்தமான அலுவலகங்கள், இயக்குநர்களின் வீடுகள் ஆகிய இடங்களில் சிபிஐ அதிரடி சோதனை நடத்தியது.

 

Related posts

சென்னை விமான நிலையம் உள்ளிட்ட 3 இடங்களில் வெடிகுண்டு வெடிக்கும் என இமெயில் மூலம் மிரட்டல்

தமிழ்நாட்டில் சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது

அருணாச்சலப்பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் பாஜக 10 வெற்றி உள்பட மொத்தம் 31 இடங்களில் முன்னிலை