ரூ.2,000 தாள்களை வங்கிகளில் மாற்றுவதற்கான கால அவகாசம் அக்.7ஆம் தேதி வரை நீட்டிப்பு: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

மும்பை: ரூ.2,000 தாள்களை வங்கிகளில் மாற்றுவதற்கான கால அவகாசம் அக்.7ஆம் தேதி வரை நீட்டித்து ரிசர்வ் வங்கி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இன்று கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 30ம் தேதிக்கு பின் ரூ.2000 நோட்டுகள் செல்லாது என்றும் அந்த நோட்டுகளை வைத்து இருப்பவர்கள் வங்கியில் ஒப்படைக்குமாறும் கடந்த மே மாதம் ரிசர்வ் வங்கி அறிவிப்பை வெளியிட்டது. பொதுமக்களுக்கு ரூ.2000 நோட்டுகளை மாற்றுவதற்கு 4 மாதங்கள் வரை அவகாசம் கொடுக்கப்பட்டு விட்டதால், செப்டம்பர் 30ம் தேதிக்கு பின், அந்த நோட்டு செல்லாதது ஆகிவிடும் என ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது.

இதையடுத்து வங்கிகள் மற்றும் பெட்ரோல் பங்குகளில் ரூ.2000 நோட்டுகளை பொதுமக்கள் மாற்றி வந்தனர். செப்டம்பர் 28ம் தேதிக்கு பிறகு ரூ.2000 நோட்டுகளை வாங்க வேண்டாம் என்று அரசு போக்குவரத்து கழகம் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியது.

பெட்ரோல் விற்பனை நிலையங்களிலும் நேற்றுடன் ரூ.2000 வாங்கப்படாது என தெரிவிக்கப்பட்டது. நோட்டுகளை திரும்பப்பெறுவதாக அறிவித்த பின், புழக்கத்தில் இருந்த 96% ரூ.2000 நோட்டுகள் திரும்பப்பெறப்பட்டு விட்டதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ரூ.2,000 தாள்களை வங்கிகளில் மாற்றுவதற்கான கால அவகாசம் அக்.7ஆம் தேதி வரை நீட்டித்து ரிசர்வ் வங்கி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இன்று கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

அக்.8க்கு பிறகு 19 ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் 20,000 வரை ரூ.2,000 நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் எனவும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள 19 கிளைகளில் தனிநபரோ, நிறுவனமோ அக்.8க்கு பிறகும் ரூ.2,000 தாள்களை மாற்றலாம் எனவும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

Related posts

அரசு பள்ளிகளில் 6890 ஹைடெக் லேப் நிர்வாகிகள் நியமனம்; பணிகளை வரையறை செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

அதிமுக தொடர்ந்து சரிவை சந்தித்து வருவதால் ஒன்றிணைந்து செயல்பட சசிகலா அழைப்பு

விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல்வரலாற்று வெற்றிக்காக முழு பலத்துடன் களம் இறங்கிய திமுக: தோல்வி பயத்தில் ஒதுங்கியதா அதிமுக? பாஜவுக்கு பலமில்லாததால் பாமக போட்டி