கருப்பு பணம் வைத்திருப்பவர்களுக்கு ராஜ வரவேற்பு: வெள்ளை அறிக்கை கோருகிறது காங்கிரஸ்

புதுடெல்லி: ரூ.2,000 நோட்டை திரும்ப பெறும் அரசின் நடவடிக்கையானது கருப்பு பணம் வைத்திருப்பவர்களுக்கு ராஜ வரவேற்பு அளிப்பதாகும் என்று குற்றம் சாட்டிய காங்கிரஸ் இது தொடர்பான வெள்ளை அறிக்கை கேட்டு வலியுறுத்தி உள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி புழக்கத்தில் இருக்கும் ரூ.3.62 லட்சம் கோடி மதிப்பிலான, 181 கோடி 2,000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக கடந்த 19ம் தேதி அறிவித்தது. மேலும், இவற்றை வங்கிகளில் மாற்றி கொள்ள அடையாள சான்றுகள் எதுவும் தேவையில்லை என்று அறிவித்தது. இந்நிலையில், இது குறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கவுரவ் வல்லப் கூறுகையில், “இந்த ரூ.3.62 லட்சம் கோடியில் பாதி கருப்பு பணம் வைத்திருப்பவர்களிடம் தான் உள்ளது.

வங்கிகளில் 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்ற அடையாள சான்று எதுவும் தேவையில்லை என்று ரிசர்வ் வங்கி அறிவித்திருப்பதன் மூலம் மோடி அரசு கருப்புபணம் வைத்திருப்பவர்கள் தங்களது கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றி கொள்வதற்கு ராஜ வரவேற்பு அளித்துள்ளது,” என்று குற்றம் சாட்டியுள்ளார்.
அவர் மேலும் பேசிய போது, “2,000 ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்துவதால் கருப்பு பணம் ஒழியும் என்று முதலில் யார் சொன்னது என்று ஒன்றிய அரசு வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்,” என்று வலியுறுத்தினார்.

Related posts

நீலகிரி மலை ரயிலுக்கு 125 வயது: கேக் வெட்டி கொண்டாட்டம்

டூவீலருக்கு தவணை தொகை செலுத்தாத விவகாரம்; நடுரோட்டில் இளம்பெண் மானபங்கம்: தனியார் நிறுவன அதிகாரி மீது வழக்கு

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் புதிய இலச்சினை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார்