ரவுடி பிறந்த நாள் விழாவில் ஆயுதங்களுடன் பங்கேற்ற 10 பேர் அதிரடி கைது

திருவெறும்பூர்: திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள பனையக்குறிச்சியை சேர்ந்தவர் ஜெகன்(எ) கொம்பன் ஜெகன்(30). ரவுடியான இவர் மீது கொலை வழக்கு, கூலிப்படையாக செயல்பட்டது, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இவர், தனது பிறந்தநாள் விழாவை திருச்சி பகுதியில் போஸ்டர் ஒட்டி பெரிய அளவில் கொண்டாடினார். அதனைத்தொடர்ந்து நேற்றிரவு இவரது வீட்டில் கூட்டாளிகளுக்கு கறி விருந்து ஏற்பாடு செய்திருந்தார். அதில் இவரது கூட்டாளிகள் 9 பேர் பட்டா கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்து கலந்து கொண்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த திருவெறும்பூர் டிஎஸ்பி அறிவழகன் தலைமையிலான போலீசார், ஜெகனின் வீட்டிற்கு சென்று, ஜெகன் மற்றும் அவனது கூட்டாளிகள் 9 பேர் உட்பட 10 பேரை கைது செய்து, அவர்களிடம் இருந்து பட்டா கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.

Related posts

நீட் தேர்வு முறைகேடு: மேலும் 9 மாணவர்களுக்கு நோட்டீஸ்

ஜப்பானில் கடந்த சில நாட்களாக அரிய வகை நோய் விரைவாக பரவி வருகிறது ஜூன் 2 முதல் பாதிப்பு அதிகரிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடாதது மேலிடத்தின் உத்தரவு: ப.சிதம்பரம் விமர்சனம்