ஹார்டுவேர்ஸ் கடையில் ரூ.1.8 லட்சம் கொள்ளை

ஸ்ரீபெரும்புதூர்: சுங்குவார்சத்திரம் அடுத்த சிருமாங்காடு பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் (32). இவர், சுங்குவார்சத்திரம் பஜாரில் ஹார்டுவேர்ஸ் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், கடந்த புதன்கிழமை அன்று இரவு வழக்கம்போல் கடையை பூட்டிக் கொண்டு சென்றுள்ளார். பின்னர், நேற்று முன்தினம் காலை கடைக்கு வந்து பார்த்தபோது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு, கல்லாப்பெட்டியில் வைத்திருந்த ரூ.1.8 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த ராஜ்குமார், கடையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், பேண்ட் சட்டை அணிந்து வந்த ஒருவர், கடையின் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைவதும், பின்னர், இரும்பு ஆயுதத்தின் மூலம் கல்லாப்பெட்டி உடைத்து பணத்தை பார்த்ததும் அதிர்ச்சி அடைவதும், கல்லாபொட்டிக்கு பின்புறம் உள்ள சாமி புகைப்படங்களை கண்டு பயபக்தியுடன் கைகளால் வணங்கி பணத்தை திருடி செல்வதும் பதிவாகி இருந்தது. புகாரின்பேரில் சுங்குவார்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Related posts

உதகை – குன்னூர் 23 கி.மீ புறவழிச்சாலையின் பணி 80% நிறைவு: புறவழிச்சாலை விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என அதிகாரிகள் தகவல்

சதுரகிரிக்கு செல்ல 4 நாட்களுக்கு அனுமதி

ஜூன் 17: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை