ரோஸ்டட் வெஜிடபுள் கோதுமை ரவை சாலட்

தேவையானவை:

கோதுமை ரவை – ¼ கப்,
வெங்காயம்,
வெள்ளரிக்காய்,
பச்சை, மஞ்சள், சிகப்பு குடைமிளகாய் தலா – 1,
புரோக்கோலி – பாதியளவு,
கெட்டியான தக்காளி – 2,
ஆலிவ் ஆயில் – 2 டேபிள் ஸ்பூன்,
மிளகு தூள் – 1 டீஸ்பூன்,
வறுத்த பாதாம் பருப்பு – 7(நீளமாக மெல்லியதாக வெட்டியது),
நறுக்கிய கொத்தமல்லி தழை – 2 டேபிள் ஸ்பூன்,
உப்பு – தேவைக்கேற்ப,
பூண்டு பல் – 2.

செய்முறை:

கோதுமை ரவையைக் கழுவி தண்ணீரில் சிறிது நேரம் ஊறவைக்கவும். பிறகு ஒரு பாத்திரத்தில் கொதிக்கும் தண்ணீரில் போட்டுக் குழையாமல் உதிர் உதிராக வேகவைத்து தண்ணீரை வடித்து ஆற வைக்கவும். 3 கலர் குைடமிளகாய்களை விதை நீக்கி நான்குத் துண்டுகளாகப் பெரிதாக நறுக்கிக் கொள்ளவும். புரோக்கோலியை பெரியப் பூக்களாக வெட்டிக் கொள்ளவும். ஒரு கடாயில் ஆலிவ் ஆயில் ஊற்றி அடுப்பில் வைத்து நறுக்கிய கலர் குைடமிளகாய், பூண்டு, புரோக்கோலி ஆகியவற்றை லேசாக நிறம் மாறாமல் வதக்கவும். பிறகு வதக்கிய குடமிளகாய், பூண்டு ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். புரோக்கோலியை நறுக்கத் தேவையில்லை. வெங்காயம், தக்காளி, வெள்ளரிக்காய் ஆகியவற்றை சிறுசிறுத் துண்டுகளாக நறுக்கவும். வேகவைத்த கோதுமை ரவை, காய்கறி, உப்பு, மிளகுத் தூள், எலுமிச்சை சாறு, ெகாத்தமல்லி தழை எல்லாவற்றையும் ஒரு பவுலில் சேர்த்து கலந்து அதன் மேல் நறுக்கிய பாதாம் பருப்பை தூவி பரிமாறவும்.குறிப்பு: இந்த சாலட்டில் கோதுமை ரவைக்குப் பதிலாக வேகவைத்த சிறுதானியங்களைச் சேர்க்கலாம்.

Related posts

இளநீர் நன்னாரி ஜூஸ்

கடாய் பனீர்

வெண்டைக்காய் பருப்பு சாதம்