ம.பி முதல்வரின் ரோட்ஷோவில் மேடை சரிந்து தொண்டர்கள் படுகாயம்

நீமுச்: மத்திய பிரதேச முதல்வர் சவுகான் ரோட்ஷோ நிகழ்ச்சியில் பங்கேற்ற போது அப்பகுதியில் அமைக்கப்பட்ட தற்காலிக மேடை சரிந்து விழுந்த விபத்தில் சிலர் காயமடைந்தனர். மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் நேற்று நீமுச் மாவட்டம் மானசா நகரில் நடந்த சாலை பேரணியில் பங்கேற்றார். சாலையோரமாக தற்காலிக மேடை அமைக்கப்பட்டிருந்தது. அந்த தற்காலிக மேடையில் நின்றிருந்த கட்சியினர் 50க்கும் மேற்பட்டோர், அவ்வழியாக வரும் முதல்வர் சவுகானை வரவேற்கும் வகையில் ஒலிபெருக்கியில் பேசிக் கொண்டிருந்தனர்.

முதல்வரும் மேடைக்கு அருகே தனது ஆதரவாரளர்களுடன் சென்றார். அப்போது திடீரென தற்காலிக மேடை சரிந்து விழுந்ததில், அங்கு நின்றிருந்த பலரும் கீழே விழுந்தனர். இந்த சம்பவத்தில் 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். முதல்வரின் வாகனம் செல்லும் வரை, அங்கு மீட்புப் பணிகள் ஏதும் நடைபெறவில்லை. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் குறித்து காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

Related posts

பள்ளி மாணவிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய வழக்கு பெண் புரோக்கர் நதியா உள்பட 4 பேருக்கு குண்டாஸ்: போலீஸ் கமிஷனர் ரத்தோர் உத்தரவு

நடிகர் அரவிந்த்சாமி தொடர்ந்த வழக்கில் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ படத்தின் தயாரிப்பாளருக்கு வாரன்ட்: ஐகோர்ட் உத்தரவு

ஒன்றிய அமைச்சரான பிறகும் கர்நாடகாவுக்கு ஆதரவாக பேசிய சோமண்ணா நம்பகத்தன்மையை இழந்து விட்டார்: ராமதாஸ் குற்றச்சாட்டு