ரயில் கட்டணத்தை உயர்த்த இப்படி ஒரு தந்திரம்

அறிவிப்பு: 40ஆயிரம் சாதாரண ரயில் பெட்டிகள் வந்தே பாரத் தரத்திற்கு மாற்றப்படும். நடக்கப்போவது இதுதான்: தற்போது பயணிகள் ரயில்களில் கட்டணம் குறைவு. இது சாதாரண ஏழை மக்கள் நீண்ட தூரம் பயணிக்க உதவுகிறது. ஆனால், சாதாரண ரயில் பெட்டிகளை கழற்றிவிட்டுவிட்டு வந்தே பாரத் தரத்திலான ரயில் பெட்டிகளை இணைக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது.

இது, கட்டணத்தை அதிகரிப்பதற்கான யுக்தி. சாதாரண ரயிலின் கட்டணத்தைவிட வந்தேபாரத் ரயிலுக்கான கட்டணம் சுமார் நான்கு மடங்கு வரை அதிகம். சாதாரண ரயிலில் வந்தே பாரத் தர பெட்டிகள் இணைக்கப்பட்டால், கட்டணம் தானாகவே உயர்த்தப்பட்டுவிடும். ஏழை, நடுத்தர மக்களுக்கு ரயில் பயணம் என்பது கனவில்தான் என்று எச்சரிக்கிறார் ரயில்வே தொழிற்சங்க நிர்வாகி ஒருவர்.

Related posts

நீலகிரி அருகே குறிஞ்சி நகர் பகுதியில் 26 அடி கிணற்றில் விழுந்த யானை குட்டி 8 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்பு

நீலகிரி கொளப்பள்ளி குறிஞ்சி நகர் பகுதியில் 26 அடி கிணற்றில் விழுந்த யானை குட்டி மீட்பு

சோழவரம் அருகே மின்சாரம் பாய்ந்து லாரியில் தீ: ஓட்டுநர் பலி