திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தாம்பூலத்துடன் குவார்ட்டர் பாட்டில்: புதுவையில் பரபரப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தாம்பூலத்துடன் குவார்ட்டர் மது பாட்டிலும் வழங்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருமண வரவேற்பிற்கு வரும் உறவினர்கள் மற்றும் விருந்தினர்களுக்கு உணவு அருந்தி செல்லும்போது தாம்பூலம் கொடுப்பது வழக்கமாக இருந்து வருகிறது.

அந்த தாம்பூல பையில் வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், தேங்காய், லட்டு, சாக்லேட், சாத்துக்குடி, மாம்பழம், போட்டு கொடுப்பார்கள். வசதி படைத்தவர்கள் சிலர் சில்வர் தட்டு, கிப்ட் பாக்ஸ்கள் வைத்து கொடுப்பார்கள். ஆனால் புதுச்சேரியில் மணமகள் வீட்டார் திருமண வரவேற்பில் தாம்பூல பையுடன் சேர்த்து மது பாட்டிலையும் கொடுத்துள்ளனர். இதனால் திருமணத்துக்கு வந்தவர்களில் சிலர் முகம் சுழித்தாலும், மது பிரியர்கள் பலர் புளகாங்கிதம் அடைந்தனர். சென்னையை சேர்ந்த மணமகன் ஒருவருக்கும் புதுச்சேரியைச் சேர்ந்த மணமகள் ஒருவருக்கும் நேற்றிரவு திருமண வரவேற்பு நிகழ்ச்சி புதுவை நகர பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்தது.

இந்த திருமண வரவேற்பில் சென்னை மற்றும் புதுச்சேரியை சேர்ந்த மணமக்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். திருமண வரவேற்பில் கலந்து கொண்டவர்களுக்கு மணமகள் வீட்டார் தாம்பூல பை வழங்கினர். அதில் தேங்காய், பழம், வெற்றிலை, பாக்குடன் குவார்ட்டர் மதுபாட்டிலையும் சேர்த்து கொடுத்தனர். இது திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்த மதுபிரியர்களை மகிழ்ச்சியில் திக்குமுக்காட வைத்தது. பெண்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதனால் திருமண மண்டப வளாகத்தில் பரபரப்பான சூழல் நிலவியது.

Related posts

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் துணைத் தேர்வுக்கு 16 முதல் விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாட்டில் அதிகபட்சமாக பென்னாகரத்தில் 10 செ.மீ. மழை பதிவாகி உள்ளது: வானிலை ஆய்வு மையம்

அட்சய திருதியை ஒட்டி, ஒரு சவரன் ரூ.1,240 அதிகரித்த போதிலும் தமிழகத்தில் ரூ.14,000 கோடி மதிப்பிலான தங்கம் விற்பனை!!