ராமநவமி யாத்திரைக்குழுவின் கோரிக்கையை நிராகரித்தது உயர் நீதிமன்றம்!!

சென்னை : ராமநவமியை ஒட்டி நாளை கேரளாவில் இருந்து கன்னியாகுமரி வரும் யாத்திரைக் குழு, திருச்செந்தூர் வழியே செல்ல அனுமதி மறுத்தது உயர் நீதிமன்றம். ராமர் படத்துடன் 3 வாகனங்கள், 30 பேர் மட்டுமே செல்ல வேண்டும். 2 மணிக்குள் யாத்திரையை முடித்து கேரளாவுக்கு திரும்ப வேண்டும். யாத்திரைக்குழு அரசியல் ஆதாயம் தேடக் கூடாது எனவும் நீதிபதி உத்தரவிட்டார். 7 மாவட்டங்களில் யாத்திரை செல்ல அனுமதி கோரிய மனுவை போலீசார் நிராகரிக்க, கேரளாவைச் சேர்ந்த யாத்திரைக்குழு உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்திருந்தது. எனினும், நீதிமன்றமும் அனுமதி அளிக்கவில்லை. கன்னியாகுமரியில் மட்டும் பரிசீலிக்கலாம் என கடந்த விசாரணையின் போது நீதிபதி கூறியிருந்தார். திருச்செந்தூர் வழியே செல்ல அனுமதி கோரியதையும் இன்று நீதிபதி நிராகரித்து பல்வேறு நிபந்தனைகள் விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

Related posts

சுரங்கப்பாதைகளில் தண்ணீர் தேங்கியிருந்தால் பேருந்துகளை மாற்று வழியில் இயக்க வேண்டும்: ஓட்டுநர்களுக்கு எஸ்இடிசி அறிவுறுத்தல்

பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட கலாஷேத்ரா முன்னாள் பேராசிரியர் ஜாமீன் கோரி மனு

ராகுலை பிரதமர் ஆக்க கோரிக்கை வைப்போம்: ஆதிர் ரஞ்சன் சவுத்ரி