ராமநாதபுரத்தில் பட்டா மாறுதலுக்காக 3 லட்சம் லஞ்சம் கேட்ட தாசில்தார் கைது

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா அலுவலகத்தில் தாசில்தாராக தென்னரசு என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியை சேர்ந்த கருப்பையா என்பவர் தனது பெயரில் உள்ள 2 ஏக்கர் நிலத்திற்கு பட்டா மாறுதல் செய்ய ரூ. 3,00,000/- லஞ்சம் கேட்டு அதில் முதல் தவணையாக ரூ. 1,00,000/- லஞ்சமாக கேட்டுள்ளார்.

இந்நிலையில் கருப்பையா லஞ்சம் கொடுக்க விருப்பமில்லாமல் இன்று 05.10.2023 ராமநாதபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு அலுவலகத்தில் புகார் செய்தார். புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்து அனுப்பி அங்காங்கே மறைந்திருந்தனர். அதனை தொடர்ந்து தென்னரசு (தாசில்தார், ஆர்.எஸ்.மங்கலம்) லஞ்ச வாங்கிதை உறுதி செய்த காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி தலைமையிலான லஞ்ச ஒழிப்பு துறையினர் அவரை கையும் களவுமாக பிடித்தனர்.
இது சம்பந்தமாக தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Related posts

மே மற்றும் ஜூன் மாதத்திற்குறிய துவரம் பருப்பு மற்றும் பாமாயில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கப்படும்: அமைச்சர் சக்கரபாணி

சென்னையில் கடந்த 7 நாட்களில் நடத்தப்பட்ட சிறப்பு சோதனையில் 60.2 கிலோ கஞ்சா பறிமுதல்: 51 பேர் கைது

கட்சி தலைவர்களின் கைக்கூலியாக செயல்பட்ட அதிகாரிகள் ராஜினாமா செய்யலாம்; காவல்துறைக்கு ஆந்திர அமைச்சர் எச்சரிக்கை