ராமதாஸ் வலியுறுத்தல் மருத்துவ பேராசிரியர் காலி பணியிடத்தை நிரப்ப வேண்டும்

சென்னை: மருத்துவ பேராசிரியர் காலியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, திருச்சி மருத்துவக் கல்லூரி, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி ஆகிய கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டதை மீண்டும் பெறுவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வரும் நிலையில், மருத்துவப் பேராசிரியர்கள் பற்றாக்குறை காரணமாக மேலும் 10 மருத்துவக் கல்லூரிகளின் ஏற்பளிப்பு ரத்து செய்யப்படும் ஆபத்து இருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியும், கவலையும் அளிக்கின்றன.

இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையில் அரசு மருத்துவக் கல்லூரிகளையும், மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்களையும் கொண்ட மாநிலம் தமிழ்நாடு. இந்த மருத்துவக் கல்லூரிகளின் ஏற்பளிப்பு ரத்து செய்யப்பட்டால் தமிழகத்தின் சிறப்பே, இழுக்காக மாறிவிடும். அதைத் தடுப்பதற்காக உயர் நீதிமன்றம் விதித்துள்ள இடைக்காலத் தடையை நீக்கி மருத்துவப் பேராசிரியர்கள் பதவி உயர்வுக்கான கலந்தாய்வை உடனடியாக நடத்த வேண்டும். அதன் மூலம், காலியாக உள்ள பேராசிரியர் பணியிடங்களை நிரப்பி, அரசு மருத்துவக் கல்லூரிகள் அனைத்து தகுதிகளுடன் நடப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.

 

Related posts

மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிவால் பண்ணவாடி நீர்த்தேக்க பகுதியில் முழுமையாக தெரியும் நந்தி சிலை

ஏற்காடு கோடை விழா நாளை தொடக்கம்: இறுதிக்கட்ட பணிகள் தீவிரம்

இதுவரை 428 தொகுதிகளில் தேர்தல் முடிந்த நிலையில் 58 தொகுதிகளில் நாளை மறுநாள் பிரசாரம் ஓய்கிறது: 25ம் தேதி 6ம் கட்ட வாக்குப்பதிவு; தலைவர்கள் தீவிர பிரசாரம்