அவையில் தான் பேசும்போது மைக் அணைக்கப்பட்டது திட்டமிட்டு எனக்கு செய்த அவமானம்: எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கண்டனம்

டெல்லி: அவையில் பேசிக்கொண்டு இருந்தபோது தனது மைக் அணைக்கப்பட்டது சுயமரியாதைக்கு விடுக்கப்பட்ட சவால் என்று எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார். மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேச வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தியதால், அவையில் அமளி ஏற்பட்டுள்ளது. ஆளும் பாஜக அரசை எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் சொற்களால் விமர்சித்ததாக நிர்மலா சீதாராமன் கண்டனம் தெரிவித்தார். மோசடி பேர்வழி என பாஜக எம்பிக்களை எதிர்க்கட்சி எம்பிக்கள் விமர்சித்ததாக நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டினார்.

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் செயல் கண்டிக்கத்தக்கது; அவர்கள் மன்னிப்பு கோர வேண்டும் எனவும் நிர்மலா வலியுறுத்தினார். தொடர்ந்து, மாநிலங்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் கார்கே பேசும்போது மைக்கை அணைத்ததற்கு திருச்சி சிவா கண்டனம் தெரிவித்தார். கார்கே பேசும்போது ஏன் மைக் அணைக்கப்பட்டது; யார் உத்தரவிட்டு மைக் அணைக்கப்பட்டது என்று திருச்சி சிவா கேள்வி எழுப்பினார். மைக் அணைப்பது போன்ற நடவடிக்கை எப்போதும் நடந்ததில்லை என்று குறிப்பிட்டார்.

கார்கே பேசும்போது மைக் அணைக்கப்படவில்லை என்று மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தங்கர் விளக்கம் அளித்தார். பின்னர் பேசிய எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, அவையில் பேசிக்கொண்டு இருந்தபோது தனது மைக் அணைக்கப்பட்டது சுயமரியாதைக்கு விடுக்கப்பட்ட சவால் என்று கண்டனம் தெரிவித்தார். நேற்று தான் பேசியபோது மைக் அணைக்கப்பட்டதாக கார்கே கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். தான் பேசும்போது மைக் அணைக்கப்பட்டது திட்டமிட்டு எனக்கு செய்த அவமானம் எனவும் மல்லிகார்ஜுன கார்கே குற்றம்சாட்டினார்.

Related posts

கேரளாவில் இன்று மீண்டும் நில அதிர்வு: பொதுமக்கள் பீதி

நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது

உளுந்தூர்பேட்டை அருகே மூதாட்டி வீட்டில் கொள்ளையடித்த வழக்கில் 6 பேர் கைது: 50 பவுன் நகை பறிமுதல்