மாநிலங்களவை சிறப்புரிமை குழு இன்று கூடுகிறது

புதுடெல்லி: ஆம் ஆத்மி எம்பிக்கள் ராகவ் சதா, சஞ்சய் சிங் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி டெரிக் ஓ பிரையன் ஆகியோர் மீதான மாநிலங்களவை சிறப்புரிமை மீறல் புகார்கள் நிலுவையில் உள்ளன. இதில் ராகவ் சதா மற்றும் சஞ்சய் சிங் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் உள்ளனர். இந்நிலையில், இந்த எம்பிக்கள் மீதான நிலுவையில் உள்ள புகார்கள் தொடர்பாக விவாதிக்க மாநிலங்களவையின் சிறப்புரிமை குழு இன்று கூட உள்ளது. காலை 11 மணிக்கு நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள கமிட்டி அறையில் சிறப்புரிமை குழு கூடும் என மாநிலங்களவை செயலகம் விடுத்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

 

Related posts

காளிகாம்பாள் கோயில் தலைமை அர்ச்சகர் மீது வழக்குப்பதிவு: திருவல்லிக்கேணி போலீசார் நடவடிக்கை

லாரி ஓட்டுனரிடம் செல்போன் திருடிய 4 பேர் கைது

மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்: உச்சகட்ட பாதுகாப்பில் சென்னை விமான நிலையம்