மாநிலங்களவை எம்.பி தேர்தல் பாஜ எம்எல்ஏ போட்டி

காங்டாக்: சிக்கிம் மாநிலங்களவை உறுப்பினருக்கான தேர்தலில் பாஜ சார்பில் பேரவை உறுப்பினர் டோர்ஜி ஷெரிங் லெப்சா போட்டியிடுகிறார்.  சிக்கிம் மாநிலத்தில் சிக்கிம் ஜனநாய முன்னணி(எஸ்டிஎஃப்) கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் ஹிஷே லச்சுங்பாவின் பதவிக்காலம் பிப்ரவரி 23ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து ஜனவரி 19ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் சிக்கிமின் பாக்யோங் மாவட்டம் க்னாதாங் மச்சோங் தொகுதி எம்எல்ஏ டோர்ஜி ஷெரிங் லெப்சா பாஜ சார்பில் போட்டியிடுகிறார். இதுகுறித்த அறிவிப்பை பாஜ தேசிய பொதுசெயலாளர் அருண்சிங் வௌியிட்டுள்ளார்.

Related posts

6,244 காலி பணியிடங்களுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு 15.88 லட்சம் பேர் எழுதினர்

ஜூலை 1 முதல் ரயில்களின் நம்பர்கள் மாற்றம் முன்பதிவில்லா விரைவு ரயில்கள் பயணிகள் ரயில்களாக மாற்றம்: தெற்கு ரயில்வே தகவல்

கவர்மென்ட் வேலையும் போச்சு டெபாசிட்டும் போச்சு என புலம்பும் வேட்பாளரை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா