ரயில்வே பாதுகாப்பு படையில் 4208 கான்ஸ்டபிள்

பணி: Constable (Executive): 4208 இடங்கள்.
சம்பளம்: ரூ.21,700. வயது: 1.7.2024 தேதியின்படி 18 முதல் 28க்குள். எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசியினருக்கு 3 ஆண்டுகள் தளர்வு அளிக்கப்படும். (ெபாது/பொருளாதார பிற்பட்டோர் பிரிவைச் சேர்ந்த விதவைகளுக்கு 2 ஆண்டுகள், ஓபிசியைச் சேர்ந்த விதவைகளுக்கு 5 ஆண்டுகள், எஸ்சி/எஸ்டி பிரிவைச் சேர்ந்த விதவைகளுக்கு 7 ஆண்டுகள் தளர்வு அளிக்கப்படும்.).
தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

உடற்தகுதி: ஆண்கள்- குறைந்தபட்சம் 165 செ.மீ., உயரம் இருக்க வேண்டும். (எஸ்சி/எஸ்டி- 160 செ.மீ.,).
பெண்கள்- குறைந்தபட்சம் 157 செ.மீ., உயரம் இருக்க வேண்டும். (எஸ்சி/எஸ்டி- 152 செ.மீ).
மார்பளவு: ஆண்கள்- சாதாரண நிலையில் 80 செ.மீ., அகலம், இருக்க வேண்டும். (இரு பாலருக்கும் 5 செ.மீ., சுருங்கி விரியும் தன்மை பெற்றிருக்க வேண்டும்).
உடற்திறன்: (ஆண்கள்)- 1600 மீட்டர் தூரத்தை 5 நிமிடம் 45 வினாடிகளில் ஓடி முடிக்க வேண்டும். 14 அடி நீளம் தாண்டு திறனும், 4 அடி உயரம் தாண்டும் திறனும் பெற்றிருக்க வேண்டும்.
பெண்கள்: 800 மீட்டர் தூரத்தை 3 நிமிடம், 40 வினாடிகளில் ஓடி முடிக்க வேண்டும். 9 அடி நீளம் தாண்டும் திறனும், 3 அடி உயரம் தாண்டும் திறனும் பெற்றிருக்க வேண்டும்.

கட்டணம்: ரூ.500/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். (எஸ்சி/எஸ்டி/பெண்கள்/ சிறுபான்மையினருக்கு ₹250/- மட்டும்). எழுத்துத் தேர்வில் பங்கேற்கும் எஸ்சி/எஸ்டியினர் மற்றும் பெண்கள், முன்னாள் ராணுவத்தினருக்கு முழு கட்டணமும் திருப்பி வழங்கப்படும். பொது/ஓபிசி/ பொருளாதார பிற்பட்டோருக்கு ₹400 திருப்பி வழங்கப்படும்.

ஆன்லைன் விண்ணப்பத்தில் சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல் எண்ணை குறிப்பிட வேண்டும். எழுத்துத் தேர்வுக்கான அட்மிட் கார்டு மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும். எழுத்துத் தேர்வில் தமிழ், இந்தி, ஆங்கில மொழிகளில் வினாத்தாள் அமைந்திருக்கும். எழுத்துத் தேர்வில் பங்கேற்கும் எஸ்சி/எஸ்டியினருக்கு பயணக் கட்டணம் வழங்கப்படும். www.indianrailways.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 14.05.2024.

 

Related posts

தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

மக்களவை தேர்தலில் இன்று 5-ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது

சென்னை உள்ளிட்ட இடங்களில் மழை!