ராகிங்கை தடுக்காவிட்டால் நடவடிக்கை கல்வி நிறுவனங்களுக்கு யு.ஜி.சி கடும் எச்சரிக்கை

சென்னை: உயர்கல்வி நிறுவனங்களில் ராகிங் சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை தண்டிக்க தவறினாலோ யு.ஜி.சி. விதிமுறைகளின்படி, அந்த கல்வி நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என யு.ஜி.சி. உத்தரவிட்டு இருக்கிறது. இதுதொடர்பாக கல்வி நிறுவனங்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து யு.ஜி.சி. சில அறிவுறுத்தல்களையும் வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு: சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி, மாவட்ட அளவில் மாவட்ட கலெக்டர், துணை ஆணையர், மாவட்ட மாஜிஸ்திரேட் தலைமையில் ராகிங் தடுப்புக் குழு அமைக்கப்படும்.

இந்த குழு குறித்த விவரங்களை பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்கள் அவர்களின் இணையதளத்தில் தெரிவித்திருக்க வேண்டும். அதேபோல், கல்வி நிறுவனங்களில் ராகிங் எதிர்ப்பு பிரிவு, ராகிங் தடுப்பு படைகள் அமைக்கப்பட வேண்டும். அவர்களுக்கு ராகிங்கில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில் அதிகாரம் வழங்கப்பட வேண்டும். ராகிங் தொடர்பான யு.ஜி.சி.யின் விதிமுறைகளை பின்பற்றாத கல்லூரியின் முதல்வர், பல்கலைக்கழக பதிவாளர் தேசிய ராகிங் தடுப்பு கண்காணிப்புக் குழுவிடம் பதில் அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

Related posts

ஒன்றிய உணவுத்துறையில் பொறுப்பு தருவதாக சேலம் டாக்டரிடம் ரூ.2.48 கோடி மோசடி: சேலம் கோர்ட்டில் ஒருவர் சரண்; 2 பேருக்கு வலை

நடமாடும் நகைக்கடையாக நீதிமன்றத்தில் ரவுடி ஆஜர்

கள்ளக்குறிச்சி மாணவி மதி உயிரிழந்த விவகாரம் சிசிடிவி காட்சி, போன் ஆடியோவை ஜூன் 19ல் தாக்கல் செய்ய வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு