வாழ்க்கை வரலாற்றை தெரிந்து கொள்ளும் வகையில் திருவள்ளுவர் சிலையில் கியூஆர் கோடு வசதி: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை: வாழ்க்கை வரலாற்றை தெரிந்து கொள்ளும் வகையில் திருவள்ளுவர் சிலையில் கியூஆர் ேகாடு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தலைவர்களின் சிலைகளிலும், நினைவில்லங்களிலும் கியூஆர் கோடு பொருத்தி அதன் மூலம் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை பொதுமக்கள் அறிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்படும். முதலாவதாக திருவள்ளுவர் சிலையிலும், அதற்கு பிறகு அனைத்து சிலைகளிலும் கியூஆர் கோடு பொருத்தும் பணி தொடங்கப்படும் என்று செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அறிவித்திருந்தார்.

அதன்படி, சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு அருகே செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் நினைவகங்கள் மற்றும் தலைவர்களின் சிலைகளை 360 டிகிரி கோணத்தில் படமெடுத்து, கியூஆர் -விரைவு துலங்கல் குறியீடு மூலம் பொதுமக்கள் பார்வைக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மயிலாப்பூர் எம்எல்ஏ மயிலை த.வேலு, சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ்குமார், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் செல்வராஜ், செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குனர் மோகன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து மெரினா கடற்ரைக்கு வந்த ஏராளமானோர் கியூஆர் கோடு மூலம் திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு மற்றும் அனைத்து விவரங்களையும் ஆர்வமுடன் தெரிந்து கொண்டனர்.

Related posts

திருவண்ணாமலையில் இன்று அண்ணாமலையார் கோயில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி தொடங்கியது

குடியாத்தம் அருகே நேற்றிரவு சூறாவளி காற்றுடன் கனமழை: 3 ஆயிரம் வாழைமரங்கள் சேதம்

ஜப்பானில் நிலநடுக்கம்: ரயில் சேவை நிறுத்தம்