8 ஆண்டு பழைய போதை பொருள் வழக்கில் பஞ்சாப் காங்கிரஸ் எம்எல்ஏ கைது

சண்டிகர்: 8 ஆண்டுகளுக்கு முன் நடந்த போதை பொருள் வழக்கில் பஞ்சாப் காங்கிரஸ் எம்எல்ஏ கைது செய்யப்பட்டுள்ளார். அவரை 2 நாள் போலீஸ் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பஞ்சாப்பில் முதல்வர் பகவந்த் சிங் மான் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. மாநில காங்கிரஸ் எம்எல்ஏவாக இருப்வர் சுக்பால் சிங் கைரா. சண்டிகர் கூடுதல் எஸ்பி மஞ்சித் சிங் தலைமையிலான போலீசார் நேற்று காலை 6 மணிக்கு சுக்பால் வீட்டுக்கு வந்தனர்.

கைராவின் வீட்டில் சோதனை நடத்த வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். அப்போது கைரா நீங்கள் யார், உங்களுடைய அடையாள அட்டையை காண்பியுங்கள் என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வீட்டில் சோதனை நடத்திய பின்னர், கடந்த 2015ம் ஆண்டு நடந்த போதை பொருள் வழக்கில் கைது செய்வதாக அவரிடம் தெரிவித்தனர். அதை தொடர்ந்து அவரை பஸில்கா மாவட்டத்தில் உள்ள ஜலலாபாத்துக்கு போலீசார் அழைத்து சென்றனர். அவரை 2 நாள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related posts

இம்முறை எந்த ஒரு கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மையை பொதுமக்கள் வழங்கவில்லை: தேர்தல் முடிவுகள் குறித்து மல்லிகார்ஜுன கார்கே பதிவு

ஜெகன் மோகன் ரெட்டி ராஜினாமா

பேரறிஞர் அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை