மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்ட பஞ்சாப் மாஜி முதல்வர் ஐசியூ:வில் அட்மிட்

சண்டிகர்: மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்ட பஞ்சாப் முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல், ஐ.சி.யூ:வில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிரோமணி அகாலிதளம் கட்சியின் நிறுவனரும், பஞ்சாப் முன்னாள் முதல்வருமான பிரகாஷ் சிங் பாதலுக்கு (95), கடந்த ஒரு வாரத்திற்கு முன் திடீர் மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் மொஹாலியில் உள்ள ஃபோர்டிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஐ.சி.யூ:வில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு, தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று தனியார் மருத்துவமனை சனிக்கிழமை வெளியிட்ட மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் 5 முறை முதல்வராக இருந்த பிரகாஷ் சிங் பாதலின் உடல் நிலை குறித்து அவரது குடும்பத்தினரிடம் உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் விசாரித்தனர். ஏற்கனவே இரைப்பை அழற்சி மற்றும் ஆஸ்துமா தொடர்பான பிரச்னைகளால் அவதிப்பட்டு வந்த பிரகாஷ் சிங் பாதல், கடந்த ஆண்டு ஜூன் மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

சர்தார் வல்லபாய் பட்டேல் விரும்பிய வலிமையான இந்தியாவை உருவாக்க வேண்டும் என்பதே மக்களின் விருப்பம்: மல்லிகார்ஜுன கார்கே

வாக்கு எண்ணிக்கையின்போது அதிகாரிகள் சுதந்திரமாக செயல்படுவதே தலையாய கடமை: மல்லிகார்ஜுன கார்கே

பழநி பகுதியில் தொடர் மழை; நிரம்பி வழிகிறது வரதமாநதி அணை: விவசாயிகள் மகிழ்ச்சி