புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் உண்மை கண்டறியும் வழக்கு ஜனவரி 6ம் தேதிக்கு ஒத்திவைப்பு!!

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் உண்மை கண்டறியும் வழக்கு ஜனவரி 6ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. வழக்கு விசாரணை அதிகாரி மருத்துவ விடுப்பில் உள்ளதால் அவகாசம் கோரப்பட்டதால் ஒத்திவைக்கப்பட்டது.குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்தது தொடர்பான வழக்கில் உண்மை கண்டறியும் சோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. உண்மை கண்டறியும் சோதனை நடத்த வேங்கைவயல், இறையூரைச் சேர்ந்த 10 பேருக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஏற்கெனவே 31 பேருக்கு டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன.

Related posts

தமிழ்நாட்டில் இன்று, நாளை மற்றும் ஜூன் 5-ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்

கன்னியாகுமரி விவேகானந்தர் பாறைக்கு சுற்றுலாப் பயணிகள் செல்லத் தடை

10ம் தேதி முதல் 21 நாட்களுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் பணி!!