பொதுமக்கள் குறைதீர் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை: தஞ்சாவூர் கலெக்டர் அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்

தஞ்சாவூர் மே 30: தஞ்சாவூர் மாவட்டத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமையில் நடைபெற்றது.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் நேற்று தலைமை வகித்து பேசியதாவது:
தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்வி கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 365 மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட மனுக்களை விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும், மனுக்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்த விவரத்தை உடனடியாக மனுதாரருக்கு தெரிவிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு கலெக்டர் பேசினார்.

அதனைத் தொடர்ந்து மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்ட அடையாள அட்டையினை சமூக பாதுகாப்பு துறையின் கீழ் பதிவு பெற்று செயல்படும் டிஇஎல்சி நாசரேத் குழந்தைகள் இல்லத்தில் தங்கி பயிலும் குழந்தைகளுக்கு வழங்கினார்.இக்கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் (வருவாய்) சுகபுத்ரா, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) காந்த், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) தவவளவன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் குளோரி குணசீலி, மாவட்ட திட்ட அலுவலர் விஜய் ஆனந்த் (முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம்) மற்றும் அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related posts

குளச்சல் அருகே மீன்பிடித் தொழிலாளியிடம் செல்போன் திருடியவர் கைது

முதியவர் மயங்கி விழுந்து சாவு

தோவாளை அருகே நான்குவழிச்சாலையில் விபத்து ஏற்படுத்தும் தடுப்புகள் ஒளிரும் ஸ்டிக்கர்கள் ஒட்ட கோரிக்கை