குளச்சல் அருகே மீன்பிடித் தொழிலாளியிடம் செல்போன் திருடியவர் கைது

குளச்சல், மே 1: குளச்சல் அருகே கோடிமுனையை சேர்ந்தவர் அந்தோணி. அவரது மகன் சகாய அருள் நிஜன்(33). கடலில் மீன் பிடித்தொழில் செய்து வருகிறார். கடந்த 15ம்தேதி நள்ளிரவு நிஜன் கோடிமுனை ஆலயம் முன்பு படுத்து தூங்கினார். அப்போது அந்த வழியாக சென்ற மர்ம நபர் சகாய அருள் நிஜனின் பாக்கெட்டில் இருந்து ₹ 2900 ரொக்கம், 2 செல்போன்களையும் எடுத்து சென்று விட்டார். மறுநாள் காலை விழித்து பார்த்த போது திருட்டு நடந்தது தெரிய வந்தது. இது குறித்து நிஜன் குளச்சல் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தொழிலாளியிடம் இருந்து பணம், செல்போனை திருடி சென்ற நபர் குறித்து துப்பு துலக்கி வந்தனர். மேலும் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களையும் ஆய்வு செய்தனர். இதில் சகாய அருள் நிஜனிடம் இருந்து குறும்பனை சிலுவையார் தெருவை சேர்ந்த அபிமோன் (26) பணம், செல்போன்களை திருடி செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. இதையடுத்து போலீசார் அபிமோனை கைது செய்து இரணியல் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர்.

Related posts

அரசின் வேளாண் திட்டம் குறித்து விவசாயிகளுக்கு விளக்கம்

நெடுஞ்சாலை பணிகளை தணிக்கை குழு ஆய்வு

துவரங்குறிச்சி அருகே குளம்போல் தேங்கிய மழை நீரால் விபத்து அபாயம்