பிஎஸ்எல்வி சி56 ராக்கெட் ஜூலை 30-ம் தேதி விண்ணில் பாய்கிறது: இஸ்ரோ நிறுவனம் அறிவிப்பு

பெங்களூரு: பிஎஸ்எல்வி சி56 ராக்கெட் ஜூலை 30-ம் தேதி காலை 6.30 மணிக்கு விண்ணில் பாய்கிறது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்படுகிறது. சிங்கப்பூர் நாட்டின் DS SAR புவிநோக்கு செயற்கைகோளுடன் PSLV C56 ராக்கெட் விண்ணில் பாய்கிறது.

தகவல் தொடர்பு, தொலையுணர்வு, வழிகாட்டு செயற்கைக்கோள் ஆகியவைகளை இஸ்ரோ நிறுவனம் விண்ணில் நிலைநிறுத்தி வருகிறது. மேலும் வணிக ரீதியாகவும் வெளிநாட்டு செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துகிறது. இந்நிலையில் சிங்கப்பூர் நாட்டின் DS SAR புவிநோக்கு செயற்கைக்கோளை விண்ணில் ஏவுவதற்கு இஸ்ரோவின் என்எஸ்ஐஎல் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

செயற்கைக்கோளை ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள முதல் ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி சி-56 ராக்கெட் மூலம் ஜூலை 30-ம் தேதி காலை 6.30 மணிக்கு விண்ணில் செலுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பணிகளில் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதில், முதன்மை செயற்கைக்கோளான DS SAR செயற்கைக்கோள் 352 கிலோ எடை கொண்டதாகும்.

இது சிந்தடிக் அப்ரேச்சர் ரேடார் தொழில்நுட்பத்தில் செயல்படக்கூடிய வகையிலும் இரவு, பகல் என அனைத்து பருவநிலையிலும் துல்லியமான படங்களை எடுத்து வழங்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்துடன் வெலாக்ஸ்-ஏஎம், ஆர்கேட், ஸ்கூப்II உள்ளிட்ட 6 சிறிய செயற்கைக்கோள்களும் விண்ணில் ஏவப்பட உள்ளது.

Related posts

வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்கிறார் ராகுல்காந்தி: இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டி

நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் ஒரு வாரம் இங்கிலாந்தில் பயிற்சி முடித்து சென்னை திரும்பிய 25 மாணவர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்

பக்தர்கள் அளிக்கும் காணிக்கை மோசடி தொடர்பாக பேசியதால் முன்னாள் கோயில் அறங்காவலரை வழிமறித்து கத்தி முனையில் கொலை மிரட்டல்: அர்ச்சகர் காளிதாஸ் உட்பட 5 பேர் மீது வழக்கு பதிவு