நாடாளுமன்ற கட்டிடம் திறப்பை கண்டித்து ஒப்பாரி போராட்டம்: காங். எஸ்சி அணி அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி எஸ்சி துறை தலைவர் எம்.பி.ரஞ்சன்குமார் வெளியிட்ட அறிக்கை: புதிய பாராளுமன்ற கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க உள்ளார். மரபுப்படி குடியரசு தலைவர் தான் திறந்து வைக்க வேண்டும். ஆனால், குடியரசு தலைவர் ஓரு பழங்குடி சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் பாஜ புறக்கணிக்கிறது. எனவே, இதை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி எஸ்சி துறையின் சார்பில் அனைத்து வீடுகளிலும் கருப்பு கொடி, அனைத்து நிர்வாகிகளும் கருப்பு உடை அணிந்து இன்று அம்பேத்கர், காந்தி, காமராஜர் போன்ற தலைவர்களின் சிலைகளுக்கு முன்னாள் கோரிக்கை ஓப்பாரி போராட்டம் நடத்தப்படும். சென்னையில் மெரினா காந்தி சிலை முன்பு போராட்டம் நடைபெறும்.

Related posts

ஜூன் 17: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

2018 தேர்தல் வேட்பு மனுவில் ரகசிய மகளின் பெயரை மறைத்த இம்ரான் கான்: உச்ச நீதிமன்றத்தில மேல்முறையீடு

காசா மக்களுக்கு உதவிகள் கிடைப்பதற்கு பகல் நேரத்தில் சண்டை நிறுத்தம்: இஸ்ரேல் அறிவிப்பு