புராதன சின்னங்களை பாதுகாப்பது இந்திய மற்றும் தமிழ்நாடு தொல்லியல் துறைகளின் கடமை: ஐகோர்ட்!

சென்னை: புராதன சின்னங்களை பாதுகாப்பது இந்திய மற்றும் தமிழ்நாடு தொல்லியல் துறைகளின் கடமை என ஐகோர்ட் தெரிவித்துள்ளது. நாட்டில் உள்ள அனைத்து புராதன சின்னங்களின் பாதுகாவலர்கள் என்ற முறையில் புராதன சின்னங்களை பாதுகாக்க வேண்டும். அரியலூர் கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள கங்கை கொண்ட சோழீஸ்வரர் கோயில் 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. யுனெஸ்கோ அமைப்பால் புராதன சின்னமாக அறிவிக்கப்பட்ட கோயிலில் கட்டுமானம் மேற்கொள்ள தடை கோரி வழக்கு. கோயிலின் பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் கட்டுமானத்துக்கு தடை கோரி தஞ்சையை சேர்ந்த வழக்கறிஞர் பாலகுரு வழக்கு. மனுதாரரின் வாதத்தை பரிசீலித்து இந்திய தொல்லியல் துறை 3 மாதங்களில் முடிவெடுக்க நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளார்.

 

Related posts

சட்டத்தை தவறாக பயன்படுத்தும் அமலாக்கத்துறை கைது நடவடிக்கைக்கு எதிராக கெஜ்ரிவால் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

வடகொரியா ஏவுகணை சோதனை

டிராலியில் மோதிய விமானம்