மதுரை தனியார் பள்ளி +2 தேர்வு மாணவர் வினாத்தாள் முறைகேடு வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்

மதுரை: மதுரை தனியார் பள்ளி மாணவர் பிளஸ் 2 தேர்வு எழுதியதில் முறைகேடு குறித்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மாணவர்கள் தேர்வு முறைகேட்டில் ஈடுபடுவதை இரும்புக்கரம் கொண்டு தடுக்க வேண்டும். அரசுத்தேர்வுகளில் மாணவர்கள் முறைகேடு செய்வதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். +2 தேர்வு முறைகேடு குறித்து உடனே மாவட்ட குற்றவியல் போலீசார் வழக்கு பதிவு செய்ய வேண்டும். சிபிசிஐடி கூடுதல் இயக்குனர் விசாரணை நடத்தி 6 மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.

 

Related posts

பர்கூர் அருகே இளம்பெண் மர்ம மரணம்: உறவினர்கள் போலீசாருடன் வாக்குவாதம்

ராமேஸ்வரம் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள விசைப்படகுகளை அதிகாரிகள் ஆய்வு

தேர்தல் முடிவுகளை மக்கள் எதிர்பார்த்திருக்கும் நிலையில் 57 தொகுதியில் நாளை கடைசி கட்ட வாக்குப்பதிவு: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்