‘இந்திய ஒற்றுமைக்கான நீதி யாத்திரை’.. பிரதமர் மோடியின் சொந்த தொகுதியான வாரணாசியில் ராகுலுக்கு மக்கள் உற்சாக வரவேற்பு..!!

உத்திரபிரதேசம்: இந்திய ஒற்றுமைக்கான நீதி யாத்திரை மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி, உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் மக்களை சந்தித்தார். காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ஏற்கனவே கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை பயணம் என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்ட நிலையில், 2-வது கட்டமாக இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையை தொடங்கி உள்ளார். மணிப்பூரில் இருந்து மும்பை வரை நடைபயணம் மேற்கொள்கிறார்.

அஸ்ஸாம், மேகாலயா, மேற்குவங்கம், ஜார்கண்ட் மாநிலத்தை தொடர்ந்து பிகாரில் நடைப்பயணம் மேற்கொண்டார். தற்போது உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் அவர் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த தொகுதியான வாரணாசியில் ராகுல் காந்திக்கு ஏராளமான மக்கள் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர். ஜீப்பில் சென்று மக்களிடம் ராகுல் காந்தி குறைகளை கேட்டறிந்தார். வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் ராகுல் காந்தி சுவாமி தரிசனம் செய்ய இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

குளச்சல் பகுதியில் கனமழை: கட்டுமரங்கள் மீன் பிடிக்க செல்லவில்லை

திண்டுக்கல் குடிநீருக்கு பயன்படும் ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்க நீர்மட்டம் உயர்வு: பொதுமக்கள் மகிழ்ச்சி

பெரும்பாறை மலைப்பகுதியில் கனமழை; புல்லாவெளி நீர்வீழ்ச்சியில் கொட்டும் தண்ணீர்: பாசன விவசாயிகள் மகிழ்ச்சி